தமிழ் சினிமாவில் வேகமாக முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தற்போதெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் தான் வெளியிட வேண்டும் என்ற தெளிவான முடிவோடு உள்ளார்.
இவரது நடிப்பில் கடந்த வருடம் சீமராஜா படம் வெளியான நிலையில் அடுத்ததாக வருகிற 17ஆம் தேதி மிஸ்டர்.லோக்கல் படம் வெளியாகவுள்ளது. மேலும் இரும்புதிரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸுடன் ஆபத்தான முறையில் லோக்கல் எலக்ட்ரிக்கல் ட்ரெய்னில் படிக்கட்டில் தொங்கி வரும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.
https://twitter.com/Psmithran/status/1123606165122719745