தேவராட்டம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படத்திற்கு ஓப்பனிங் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
ஆனால், தென் மாவட்டங்களில் இப்படம் நேற்று அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான், மேலும், காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் கூட ரோகினி திரையரங்கில் இப்படம் அனைத்து காட்சிகளும் நல்ல ஓப்பனிங் இருந்ததாக திரையரங்க உரிமையாளர்களே கூறியுள்ளனர்.
எப்படியும் இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் ரூ 2 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும், கௌதம் கார்த்திக் முந்தைய படங்கள் தோல்வி என்றாலும், இப்படத்திற்கான ஓப்பனிங் பலருக்கும் ஷாக் தான்.