உங்களது அன்பு அறிவிப்பாளர் என்கிற கணீர் குரலோடு பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பி.எச்.அப்துல் ஹமீது. அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இவரது குரல் கேட்காத வீடுகளே இருந்திருக்காது.
கணீர் என்ற குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரது அடையாளம். பாட்டு நிகழ்ச்சிகள், பிரபலங்களை பேட்டி எடுப்பது மட்டுமில்லாமல் கன்னத்தில் முத்தமிட்டால், தெனாலி போன்ற படங்களிலும் நடித்தார்.
கடந்த வருடங்களாக இவர் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது அவரை பற்றி என்ன விஷயம் என்றால், ஜீ தமிழில் இம்மாதம் 18ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் சரிகமப சீனியர் சீசன் 2ல் கலந்துகொள்ள இருக்கிறாராம்.
போட்டியாளர்களின் குரல் உச்சரிப்பை திருத்திச் சரி செய்வதற்காகவே இவரை அணுகியுள்ளார்களாம்.