சோப்பிற்கு பதில் பாட்டியின் குறிப்பு..!

228

சோப்பிற்கு பதில் பாட்டியின் குறிப்பு..!

இன்று பல வகையான சோப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. அவற்றிற்கு ஒரு எல்லை இல்லை என்பது உண்மைதான். இருந்தும் நாம் அந்த வகையான வேதி பொருட்கள் அதிகம் கலந்த சோப்புகளையே வாங்கி அடுக்கி வைத்து கொள்கின்றோம். இதற்கு மாற்று வழியாக நம் பாட்டியின் இந்த அழகு குறிப்பு உங்களுக்கு உதவும்.  தேவையானவை :-

– பால்

– தயிர்

– கடலை மாவு


செய்முறை…

இனி சோப்பிற்கு பதில் வாரத்திற்கு ஒரு முறை இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். இது முற்றிலும் எளிமையான வழி. முதலில் தயிருடன் கடலை மாவை கலந்து உடலில் பூசி குளிக்கலாம். இது வறண்ட சருமத்திற்கு ஏற்றது. எண்ணெய் பசை சருமத்திற்கு கடலை மாவுடன் பால் கலந்து உடலில் தேய்த்து குளித்தால், சருமம் மிருதுவாகும்.

 

SHARE