சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

419

 

நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார்.

10394045_1569820226569070_1844804505978527273_n DSC_0039
அரசின் மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. உள்ளக செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைப் பொறி முறையினை விடவும் சுயாதீன உள்ளக விசாரணைகளுக்கு முக்கியத்துவமளிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் வென்றெடுத்துள்ள ஜனநாயகத்துக்கும் பலமானதாக அமையும்.
அத்தோடு வென்றெடுத்துள்ள சமாதானத்தையும் நல்லாட்சியினையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

 

SHARE