
இந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன அருந்துகிறீர்களோ அதை பொருத்துதான் உங்கள் சருமம் பிரகாசிக்கும். கொழுப்பு, சர்க்கரை மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பன்னீர் ஆகியவை சிறந்தது. காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது. கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம்.
அந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். உடலில் கழிவுகள் தேங்கும்போது சருமம் தன் பொலிவை இழந்துவிடும். மேலும் உப்பு சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும். அப்படியில்லாவிட்டால், சருமம் அதன் இளமை தோற்றத்தை இழந்துவிடும்.

சரும பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டால் தான் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். அழகு பராமரிப்பின் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நம் பாரம்பரியத்தை பின்பற்றினாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம்.