தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து அடுத்து இவர் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.
மேலும், இப்படத்தை விஜய்யின் உறவினரே தயாரிக்கவுள்ளாராம், கிட்டத்தட்ட விஜய்யின் சொந்த படம் போல தான்.
இதுமட்டுமின்றி விஜய் இப்படத்தை வைத்து செம திட்டம் ஒன்று போட்டுள்ளாராம், அந்த திட்டம் அவருடையதா? இல்லை எஸ்.ஏ.சி-யுடையதா என்று தெரியவில்லை.
அதாவது தளபதி-64 படத்தில் வரும் லாபத்தில் 50% விஜய் தரப்பிற்கு செல்ல வேண்டும் என்பது போல் ஒரு முடிவை எடுத்துள்ளார்களாம்.
இதுபோக விஜய்க்கு தனி சம்பளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.