
`டிமாண்டி காலனி’, `இமைக்கா நொடிகள்’ படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. படத்தை 2020 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.
We and @Viacom18Studios jointly presents #ChiyaanVikram58 – An high octane action thriller to be directed by @AjayGnanamuthu
Shoots starts from Aug 2019 – April 2020 summer release!#ChiyaanVikram @lalit_sevenscr @AndhareAjit @sooriaruna @iamarunviswa @proyuvraaj pic.twitter.com/xrtXifhskO
— Seven Screen Studio (@7screenstudio) May 20, 2019
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் மற்றும் வயாகாம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் உருவாகும் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்றும் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.
விக்ரம் தற்போது `மஹாவீர் கர்ணா’ படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருக்கிறார். விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `கடாரம் கொண்டான்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார்.