
தேவையான பொருட்கள்:
தயிர் – 2 கப்
டேரிமில்ஸ் சாக்லேட் (dairy milk chocolate) – 6 துண்டுகள்
பூஸ்டு (boost) – 2 டீஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
பாதாம், பிஸ்தா – தேவையான அளவு
சூடான பால் – 4 டீஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – சிறிதளவு

செய்முறை:
பூஸ்டில் சூடான பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
டேரிமில்ஸ் சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை சூடான தண்ணீரின் மேல் வைத்து கிளறிக்கொண்டு இருந்தால் சாக்லேட் உருக ஆரம்பிக்கும். சாக்லேட் நன்றாக உருகி கட்டியில்லாமல் ஆனவுடன் அதை இறக்கி தனியாக வைக்கவும்.
மிக்சியில் தயிர், சக்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள பூஸ்டு, சாக்லேட், ஐஸ்கட்டிகள் சேர்த்து மறுபடியும் நுரைக்க அரைக்கவும்.
அரைத்த லஸ்ஸியை கண்ணாடி கப்பில் ஊற்றி பொடியாக நறுக்கி பாதாம், பிஸ்தா, பூஸ்டு தூவி பருகவும்.
சூப்பரான சாக்லேட் லஸ்ஸி ரெடி.