`கஜினிகாந்த்’, `காப்பான்’ படங்களில் இணைந்து நடித்த ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர்.
`டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி’ என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். சதீஷ், கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, சக்தி சரவணன் சண்டைக்காட்சிகளையும், சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
Star couple @arya_offl– @sayyeshaa starring in #TeddyTheFilm?! Project starts with a pooja today! #TeddyKickStarts?
Directed by @ShaktiRajan &
Produced by @StudioGreen2 @kegvrajaA @immancomposer musical@proyuvraaj @UVCommunication pic.twitter.com/TGJ20iadaT
— Studio Green (@StudioGreen2) May 23, 2019
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.