டோக்கியோவில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் கத்தி குத்து சம்பவம் – பாடசாலை மாணவர்கள் காயம்

338

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத நபரொருவர், இரண்டு கத்திகளால் 19 பேரை சரமாரியாக குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் சுமார் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்ததாகவும் மேலும் 3 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல்  வெளியிட்டுள்ளன.

மேலும் இதில் காயமடைந்தவர்கள் ஆரம்ப பாடசாலை மாணவிகள் என்றும் கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட 40 – 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்தோடு, குறித்த சம்பவத்தில் கைதான சந்தேக நபர் தன்னை தானே தாக்கிக் கொண்டதால் அவரின் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் வன்முறை குற்றங்கள் நடப்பது அரிதாகவே காணப்படும் சந்தர்ப்பத்தில்  இச்சம்பவமானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE