படங்கள் மூலம் கலைஞர்கள் பிரபலம் ஆவார்கள். சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் மக்களிடம் நெருங்கி இருப்பார்கள்.
அப்படி பல குடும்பங்களின் பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து படு பிரபலம் ஆனவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பல சர்ச்சைகளில் சிக்கியது, அதனால் இவரும் சந்திக்காத பிரச்சனையே இல்லை.
நிகழ்ச்சியை தாண்டி இப்போது இவர் ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கியுள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்து பதிவு போட்டுள்ளார். அதில், சொல்வதெல்லாம் உண்மை முடிந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதே தளத்தில் அதே டீமுடன் நேர் காணல் ஒன்றில் இருக்கிறேன். என்படத்தின் ஷூட்டிங் மற்றும் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது. உங்களின் நல்வாழ்த்துகளால் தான் இது நிகழ்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.