
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் – பாதி,
துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
வாழைப்பழம் – ஒன்று,
கெட்டித் தயிர் – ஒரு கப்,
உலர்திராட்சை – ஒரு டீஸ்பூன்,
பாதாம், முந்திரி துருவல் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய செர்ரி பழம் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய பேரீச்சை – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடைந்த கெட்டித் தயிரில் போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கினால்… மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.
சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.