ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றோம்.
இதற்காக கடையில் பல்வேறு மாத்திரைகளும் மருந்துகளும், இரசாயனம் கலந்த எணணெய்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
இருப்பினும் இது நாளாடைவில் வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றது.
பழங்காலத்திலிருந்தே முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இஞ்சியினை வைத்து எப்படி முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி – 1 பெரியது
- ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, பின் துருவிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் துருவிய இஞ்சி, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இஞ்சி மாஸ்க் தயார்.
தலைமுடியை நீரில் நனைத்து, பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, ஷவர் கேப் கொண்டு தலையை முழுமையாக மூடி, 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதையும், வளர்ந்திருப்பதையும் நன்கு காணலாம்.