குளிர்பானங்களால் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள்.

285

இனிப்பு சுவை நிறைந்த பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் குளிர்பானங்களால் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரியவத்துள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில் உடல் பருமன் மற்றும் பலவிதமான புற்று நோய்களை ஏற்படுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம் ஒரு அதிரடி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதில் உடல் திறன் மிக்க 1 லட்சத்து ஆயிரத்து 257 பிரெஞ்சுக்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களில் 21 சதவீதம் ஆண்களும், 79 சதவீதம் பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 42 வயதுக்காரர்களிடம் ஆன்லைனில் 48 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக அவர்கள் உண்ணும் உணவு வகைகள், குளிர்பானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுள்ளது.

மேலும் அவர்களிடையே அப்போது தினமும் குடிக்கும் குளிர்பானங்கள் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகை பானங்கள் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் சிலருக்கு மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் மூலம் இனிப்பு வகையான குளிர்பானங்களை அதிக அளவில் குடித்தால் புற்று நோய் தாக்கும் ஆபத்து இருப்பது என கண்டறியப்பட்டது.

குறித்த தகவல் இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த அளவில் இனிப்பான குளிர்பானங்கள் குடிப்பதன் மூலம் புற்று நோய் பாதிப்பு குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE