96 ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா!

108

தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 96 படம் ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகி வருகிறது.

இதில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். தற்சமயம் ஐதாராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்று வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் கசிந்துள்ளன.

த்ரிஷாவை போலவே சமந்தாவும் அதே மஞ்சள் நிற சுடிதாரில் நடித்துள்ளார். இப்படமும் தமிழை போலவே பெரும் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

SHARE