நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ஆடை. பண பிரச்சனைகளுக்கு பின் இப்படம் மாலையில் வெளியானது. ரத்ன குமார் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கு விமர்சகர்களிடமிருந்து நல்ல கருத்துக்கள் வந்தன. ஆனால் மக்களிடத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.
அமலா பால் எடுத்த முடிவினால் படம் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அமலா பால் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ 25 லட்சத்தை வழங்கியதோடு தன் சம்பளத்தில் ஒரு பகுதியையும் அவர் வாங்கவில்லையாம்.
இது மட்டுமல்ல அரவிந்த் சாமியுடன் அவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த பாஸ்கர் ராஸ்கல் படத்திற்கு பணப்பிரச்சனை வந்தபோது தன் பணத்தில் இருந்து ரூ 32 லட்சத்தை அமலா பால் கொடுத்து உதவினார் என தயாரிப்பாளார் கே.ராஜன் கூறியுள்ளார்.