அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ். குறுகிய காலத்திலேயே அஜித்தை வைத்து படம் இயக்கிய வினோத் அதில் வெற்றியும் காண்பார் என படக்குழுவினர் அவரை பாராட்டி வருகின்றனர்.
தயாரிப்பு குழுவும் அடுத்தடுத்து அப்டேட் விடுவது, பாடல்கள் ரிலீஸ் செய்வது என ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அடுத்து என்ன படத்தை முதல் நாள் முதல் ஷோவே பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸ் இன்னும் படத்திற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்யவில்லையாம். அதனால் நேர்கொண்ட பார்வை புக்கிங் பற்றி கேட்கும் ரசிகர்களுக்கு விரைவில் அறிவுப்பு கொடுக்கிறோம் என அதன் உரிமையாளர் டுவிட் போட்டுள்ளார்.