ஆற்றல் மிகுந்த அன்னாரது இழப்பினால் துயருறுகின்ற மனைவி இ பிள்ளைகள் இஉற்றார்இ உறவினர்கள் அனைவருக்கும் -இ.இந்திரராசா வடமாகாண சபை உறுப்பினர் வவுனியா மாவட்டம்

390

 

சமூக சேவையாளரின் இழப்பு எமக்குப் பேரிழப்பாகும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ வீரவாகு

கனகசுந்தரசுவாமியின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலை அடைகிறேன். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பை

பிறப்பிடமாக கொண்ட இவர் புதுக்குடியிருப்பு சிறிசுப்பிரமணிய வித்தியாசாலைஇ முள்ளியவளை வித்தியானந்த

கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

கிராமசேவையாளராக முல்லை மாவட்டத்தின் பல்வேறு கிரமங்களில் அளப்பரிய சேவையாற்றிய இவர் தமிழ்

மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தின் போதும் மக்களோடு மக்களாக இருந்து

ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவையாகும்.

இவரது இழப்பு அன்னாரது குடும்பத்தினருக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்த போதும் அவரது மக்கள் பணி தொடர

காலன் இடம் கொடுக்கவில்லையே என்ற ஏக்கமே பிள்ளைகளின் மனங்களிலும் மக்களின் இதயங்களிலும் மேலோங்கி இருந்ததை

அவதானிக் முடிந்துள்ளது.

அன்னாருடைய இழப்பு தமிழ் மக்களுக்கும்இ வடக்கு மாகாண சபைக்கும்இ புதுக்குடியிருப்பு பிரதேச வாசிகளுக்கும்

பேரிழப்பாகவே நான் கருதுகிறேன். மிக அமைதியாக இருந்து தனக்குரிய பணிகளை மக்களுடன் கைகோர்து செய்து முடிக்கின்ற

ஆற்றல் மிகுந்த அன்னாரது இழப்பினால் துயருறுகின்ற மனைவி இ பிள்ளைகள் இஉற்றார்இ உறவினர்கள் அனைவருக்கும்

எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து நிற்கிறேன்.

இ.இந்திரராசா

வடமாகாண சபை உறுப்பினர்

வவுனியா மாவட்டம்

SHARE