முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் சச்சின்

99
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் சச்சின்

முத்தையா முரளிதரன், சச்சின் டெண்டுல்கர், விஜய் சேதுபதி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.
எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படம், உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக தயாரிக்கிறது. அதேபோல் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இந்த படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார்.
முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி
இந்நிலையில், இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஒருசில காட்சியில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
SHARE