
நாடோடிகள் 2 படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் பல படங்களில் நாயகனாகவும், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை படித்த சமுத்திரக்கனி இந்த கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதையைக் கூறியுள்ளார்.

விஷாலுக்கும் இந்தக் கதை பிடித்துவிட, உடனே அந்தக் கதையைத் திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளார். இந்த திரைப்படம் ஓர் ஆன்மிக ஆக்ஷன் திரைப்படம் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பங்குபெற உள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.