ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அரவிந்த்சாமி

119
தலைவி படத்தில் அரவிந்த்சாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் ‘தலைவி’ . இதில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தலைவி பட போஸ்டர்
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
SHARE