ஐநா அறிக்கை பிற்போடப்பட்டதை கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமை 21.02.2015 யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.இவ் மாபெரும் கவனயீர்பு போராட்டத்தை சரணடைந்த மற்றும் காணாமல் போனவர்களை தேடும் உறவினர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.