ஓணம் பண்டிகையன்று திரைக்கு வரும் நயன்தாரா படம்

103
நயன்தாரா படம் ஓணத்தில் ரிலீஸ்நயன்தாரா

நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, மலையாளத்தில் 2016-ம் ஆண்டு வெளியான புதிய நியமம் படத்திற்குப் பின் வேறு படத்தில் நடிக்கவில்லை.
இந்த படத்திற்கு பின், அவர் நிவின் பாலியுடன் இணைந்து ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ படத்தில் நடித்துவந்தார். கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கேரளாவின் முக்கியமான பண்டிகை தினமாகக் கொண்டாடப்படும் ஓணம் (செப்டம்பர்) அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
 ஓணத்தின் போது வெளியாக உள்ள படத்தை குறிக்கும் விதமாக, நயன்தாரா விளக்கை ஏற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதால் இந்த மலையாள படத்தை நயன்தாரா பெரிதும் நம்பி இருக்கிறார் என்கிறார்கள்.
SHARE