குளிர்காலத்தில் யோகா செய்வதனால் கிடைக்கும் பயன்கள்

341
குளிர்காலத்தில் யோகா செய்வதனால் கிடைக்கும் பயன்கள்
ஜில்லென்ற குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிக்கிறது. வின்யாசனா என்று சொல்லப்படும் மூச்சு பயிற்சியுடன் சேர்ந்து செய்யப்படும் யோகாசனம் உங்கள் மூட்டுகளுக்கு இயக்கம் அளித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டுகளின் விறைப்புத் தன்மையையும் குறைக்கிறது. வலியை குறைக்க ஒரு சிறந்த வழி வெப்பம் ஆகும். யோகா செய்யும் பொழுது சூடு உற்பத்தி செய்யப்பட்டு உடலும் சூடாகிறது. இந்த சூடு உடலில் உள்ள தசைகளை தளர்த்தி, வலியை குறைக்கிறது.
யோகாவின் ஒரு முக்கிய அங்கம் மூச்சு பயிற்சி ஆகும். நாசி வழியே மூச்சு காற்று உள்ளிழுத்து, வெளியேற்ற படுகிறது. நாசி வழியே உள்ளே இழுக்கப்பட்ட குளிர்ந்த காற்று நுரையீரலுக்கு செல்லும் பொழுது சூடாகிறது.

நீண்ட குறுக்கிய பள்ளங்களாக இருக்கும் மூச்சு குழாயில் நுரையீரலுக்கு செல்லுமுன் வடிகட்ட படுகிறது. சுவாச அமைப்பை உறுத்தும் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் நுரையீரலை பாதுகாக்கிறது. கபாலபாதி, பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் உங்கள் நுரையீரலை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சுவாச அமைப்பிற்கும், நரம்பு மண்டலத்திற்கும் உள்ள உறவை வலுபெற வைக்கிறது.

சருமம் முறையாக உடலின் மற்ற உள்ளுறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல் போன்றவற்றுடன் இணைந்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்று கொண்டிருக்கிறது. மதியான நேர வெப்பம், குளிர்ந்த காற்று மற்றும் ஈரப்பதம் இவை அனைத்தும் சேர்ந்து சருமத்தை வறட்சியாக்கி, நீர் பதத்தை குறைத்து விடும்.

இந்த நேரத்தில் யோகா செய்தால் அதன் மூலம் உடலில் வியர்வை உண்டாகும். அதனால் இயற்கையாக உடலில் உள்ள துளைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால் சருமம் ஈரப்பதம் அடைகிறது. அதனால் சருமம் மிருதுவாகிறது. உடல் வியர்ப்பதால் உடல் சற்று கடினமாக உழைத்தால் தான் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற முடியும். அதனால் இரத்த ஓட்டம், இதய மற்றும் சுவாச அமைப்பின் செயல்பாடு அதிகரித்து உடல் எடையை பராமரிக்கவும் உதவி செய்கிறது.

SHARE