மீண்டும் இணைந்த ஜீ.வி.பிரகாஷ், யோகி பாபு

130
மீண்டும் இணைந்த செம கூட்டணிஜீ.வி.பிரகாஷ், யோகி பாபு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஜீ.வி.பிரகாஷ், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஐங்கரன்,  சிவப்பு மஞ்சள் பச்சை, 100 சதவீதம் காதல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. மேலும் அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் என கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ள ஜீ.வி.பிரகாஷ், புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பெயர் சூட்டப்படாத இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ.வி.பிரகாஷூடன் ‘செம’ ’எனக்கு இன்னோரு பெயர் இருக்கு’, ‘குப்பத்து ராஜா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த கவுஷிக் ராமலிங்கம் இயக்கும் இப்படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்,’ ’றெக்க,’ ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை. படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
SHARE