சீக்கிரம் வெள்ளையாகனுமா? அப்போ இரவில் படுக்கும் முன் இந்த பேக்கை போடுங்கள்

325

பொதுவாக பெண்களுக்கு வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும்.

இதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி போடுவதுண்டு.

இதற்கு இயற்கையாக தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சரும கருமையைப் போக்கவும், இறந்த செல்களை நீக்கவும், சரும பிரச்சனைகளான கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்றவற்றை நீக்கவும் செய்கின்றது.

இதனால் முகம் இயற்கையாகவே வெள்ளையாகும். தற்போது இங்கு ஓர் அற்புதமான உப்தன் ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை செய்து நாமும் பலன் பெறுவோம்.

தேவையான பொருட்கள்
  • உளுத்தம் பருப்பு மாவு – 1 ஸ்பூன்
  • பயித்தம் பருப்பு மாவு – 1 ஸ்பூன்
  • வெள்ளை சந்தன பவுடர் – 1/2 ஸ்பூன்
  • சிவப்பு சந்தன பவுடர் – 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் – 1 சிட்டிகை
  • ரோஸ் வாட்டர் – தேவையான அளவு
செய்முறை

முதலில் ஒரு பௌலில் உளுத்தம் பருப்பு மாவு மற்றும் பயித்தம் பருப்பு மாவை போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் சந்தனப் பொடிகள் இரண்டையும் சேர்த்து, மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து கொண்டால், ஃபேஸ் பேக் தயார்.

அடுத்து இந்த ஃபேஸ் பேக்கை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், சருமம் எப்போதும் பொலிவோடும், பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

SHARE