செம்பருத்தி தொடர் நடிகைக்கு திடீர் திருமணம்

119

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னனி பிரபலமான சீரியல்களில் செம்பருத்தி தொடரும் ஒன்று. இந்த தொடருக்கு இளைஞர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை அனைவரும் ரசிகர்களாகவே உள்ளனர்.

தொலைக்காட்சி சீரியல்களிலேயே அதிகளவு டி.ஆர்.பியையும் இந்த சீரியல் பெற்றுள்ளது.இந்நிலையில், இந்த தொடரில், காமெடி கலந்த வில்லியாக, நடிப்பவர் ஜெனிஃபர். இவர் நடிப்பு திறமையால் எராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஜெனிஃபர் சீரியலில் நடிப்பதற்கு முன்பே சரவணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் சீரியல் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்ககிடையில் அண்மையில் இருவருக்கும் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SHARE