தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தளபதி-64ல் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்காக வெளிநாடு செல்லலாம் என்று கூறிய போது கூட, விஜய் வேண்டாம் இங்கேயே எடுக்கலாம் என கூறிவிட்டாராம்.
இதன் மூலம் கண்டிப்பாக பல தமிழ் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.