ஆர்யா நடித்துள்ள ‘மகாமுனி’ திரைப்படம் வரும் 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை மற்றும் படத்தின் நேரம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 157 நிமிடங்கள் அதாவது இரண்டு மணிநேரம் 37 நிமிடங்கள் நேரம் கொண்ட படமாக உள்ளது.தணிக்கை பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால் இப்படம் வரும் 6ஆம் திகதி வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் புரமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.