24.02.2015 ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபையின் 25வது அமர்வின்போது
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா ஆற்றிய உரை
நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்தில் உள்ள கனகராயன் ஆற்றில்
இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றப்பட்டு வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அருகில்
அங்கு வசிக்கும் மக்கள் தமது தேவைகட்கு ஓரு லோட் மணல் கூட ஏற்றமுடியாமல் உள்ளது எனவும் வவுனியா
பிரதேச செயலக பிரிவில் கள்ளிக்குளம் கிராமத்தில் சுமார் 15-20 ஏக்கர் வரையான நிலப்
பரப்பரப்பில் கிரவல் தோண்டப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது எனவும்
இவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரி களுடன் தெடர்பு கொண்டு நடவடிக்கை
எடுக்கவேண்டும் எனவும் புளியங்குளம் திவிநெகும பயிற்சிநிலையமும் விவசாயப்பண்ணையும்
அமைந்துள்ளது அப்பண்ணையில் தற்போது வேறு திணைக்களத் ;திற்கு மாற்றப்படுவதாக தெரியவருகிறது
எனவும் இதில் அங்கு கடமையாற்றுகின்ற இந்த 20 மேற்பட்ட மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்
எனவும் அதை அண்டிய பரசங்குளம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்கள் இப் பண்ணையில்
வேலை செய்து தமது அன்றாட வாழ்க்கையை நடாத்தி வசிக்கிறார்கள் எனவும் இப்பண்ணையில் பாரிய முதலீடு
இருப்பதாலும் வடமாகாணசபைக்குவரும் விவசாய அமைச்சர் அவர்கள் தமது அமைச்சின்கீழ் இப்பண்ணையை
கொண்டு வரவேண்டும் எனவும் அங்கு வேலைசெய்கின்ற ஊரியர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்
எனவும் அதைஅண்டிய கிராமமக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் எனவும் இங்கு கடமையாற்றுகின்ற
இந்தஊழியர்கள் பலவருடகாலமாக தற்காலிகமாக நாளாந்த வேதனஅடிப்படையில் வேலை செய்பவர்கள் எனவும்
இவர்களை பலகாலம் இந்த நிறுவனம் நிலந்தரநியமனம் செய்வதாகக் கூறிதட்டிக்கழித்தும் வந்துள்ளார்கள்.
ஆகவே அந்தப் பாதிக்கப்பட்ட ஊழியர்களை நிலந்தரமாக்கி பண்ணையை எமது மாகாண அமைச்சுக்கு
உள்ளாக்கவேண்டும் என விவசாய அமைச்சரையும் இச்சபையையும் கேட்டுக் கொள்கின்றேன் வவுனியா பிரதேச
செயலக பிரிவில் மகிளங்குளம் கிராசேவை பிரிவில் உள்ள புதியவேலர் சின்னக்குளம் கிராமத்தில்
சுமார் 40 வருடங்களிக்கு முன்னர் குடியேறிய இக்கிராம மக்களின் காணி களிற்க்கு இதுவரை
அனுமதிப்பத்திரம் வழங்காது இருப்பது மனவேதனையை கொடுக்கின்றது தற்போது வீட்டுத்திட்டம்
தெரிவுசெய்து வந்தபோதும் காணி ஆவனம் இல்லை என்று தட்டிக் கழிக்கின்றார்கள். ஆகவே
அக்காணிகளிற்க்கு உடனடியாக அனுமதிப் பத்திரம் கொடுக்க முடியாமல் விட்டாலும் அவர்களின் காணியை
உறுதிப்படுத்தி பிரதேச செயலாளரினால் கடிதம் வழங்கியாவது அவர்கள் வீட்டுத்திட்டம் கட்டிமுடிக்க
நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இக்கிராம மக்ககளிற்கு உதவ
நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இச்சபையை கோருகின்றேன்.
நன்றி
மயில்வாகனம் தியாகராசா வடமாகாணசபை உறுப்பினர்