நடிகர் ராஜசேகரின் மறைவால் மனமுடைந்த எழுத்தாளர்

124

இன்று தமிழ் சினிமாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் நடிகர், இயக்குனருமான ராஜசேகர் மறைவு தான். சில படங்களை இயக்கியவர் பல படங்களில் நடித்திருந்தார்.

அண்மைகாலமாக சீரியல்களில் நடித்து வந்த அவரின் மறைவு குறித்து பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவியும், எழுத்தாளருமான பத்மாவதி பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் ராஜசேகர் அப்பா என்று தான் உங்களை அழைத்ததாக நியாபகம்.ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் நல்ல எழுதுற பத்மா.உன்னோட வசனம் எல்லாம் பிரமாதமாக இருக்கு.. அசத்து மகளே என்று வாழ்த்துவார். இன்று காலை இறப்பு செய்தி கேள்விப்பட்டு மனம் உடைந்து போனேன்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

SHARE