வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி

409
சூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை லட்டு

வேர்க்கடலை லட்டு
தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை – 1 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு

வெல்லம்/கரும்பு சர்க்கரை – 3/4 கப்
வேர்க்கடலை லட்டு
செய்முறை :

முதலில் வறுத்த வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இவ்வாறு செய்வதனால் வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்குவது எளிதாக இருக்கும். வறுத்த கடலையை கைகளால் கசக்கினால் ஊதினால் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.

தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்(நைசாக வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்).

அரைத்த வேர்கடலையுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் சேர்ந்து திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் வைத்து அரைக்கவும்.

அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டைகளாய் பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்!

வேர்க்கடலை எண்ணெய் விடும் அதனால் உருண்டைகளாய் உருட்ட வேறு பொருட்கள் தேவை இல்லை.
SHARE