ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் அனைத்தையும் பகிஸ்கரிப்பது என்ற முடிவின் நடைமுறை ஆரம்பம்: 28 பெப்ரவரி 2015

376

 

 

NEWS ART

முன்னைய மஹிந்த அரசினால் காணாமல் போனோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு எதிர்வருங்காலங்களில் ஒத்துழைப்பதில்லை என்ற தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமையமும் காணாமல் போகச் செய்யப்பட்ட நபர்களின் நலன் பேணும் அமைப்பும், காணாமல் போனோர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் அனைத்தையும் எதிர்காலத்தில் பகி~;கரிப்பதென்று முடிவு செய்திருந்தன. அவ்வகையில் திருகோணமலையினில் இன்று 28ம் திகதி முதல் பெப்ரவரி- 3 மார்ச் 2015ம் திகதி வரை நடைபெறவுள்ள ஆணைக்குழுவின் அமர்வுகளை பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.
முன்னதாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் திருகோணமலை இணைப்பாளரான வணபிதா. வி.யோகேஸ்வரன் அமர்வு ஆரம்பமாகிய சிறிது நேரத்தில் உள்ளே நேரினில் சென்று அமர்வை பகிஸ்கரிப்பது தொடர்பான தமது முடிவை தெரிவித்திருந்தார்.
இதனால் அங்கு பிரசன்னமாகியிருந்த விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து வெளியே காணாமல் போனோரது குடும்பங்கள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைய பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தினில் குதித்திருந்தனர்.
தமிழ் மக்கள் எவரும் வாக்குமூலமளிக்க செல்லாதிருந்த போதும் ஒரு சில முஸ்லீம் மற்றும் சிங்களவர்கள் மட்டுமே பிரசன்னமாகி வாக்குமூலமளித்தனர்.தமது புறக்கணிப்பு போராட்டம் தொடருமென போராட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமது முடிவுக்கான காரணங்கள் பற்றி தெரிவிக்கையினில்

1.   இத்தகைய சனாதிபதி ஆணைக்குழுக்கள் பல காலம் காலமாக இலங்கை அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் பெறு பேறுகள் பூச்சியமே. ,வ்வாணைக்குழுவின் நோக்கங்களும் செயற்பாடுகளும் முன்னைய சந்தர்ப்பங்கள் போன்றே திருப்தி தருவதாக இல்லை: உதாரணமாக கடந்த காலத்தில் ,வ்வாணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற அதே வேளையில் காணமால் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அமர்வுகளை நடத்தும் போது  காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பற்றியே கூடுதல் கரிசனை காட்டுகின்றனரே அன்றி காணாமல் போகச் செய்யப்பட்டவர்களைத் தேடுவதில் அவர்கள் கவனம் இல்லை என்பதை அவர்கள் இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க வருவோரிடம் கேட்கும் கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆணைக்குழுவிற்கு ஆலோசனை  வழங்குவதற்காக  நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களில் ஒருவர் இலங்கை அரசாங்கத்தினால் தனது சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு சம காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பது அண்மையில் அறியக் கிடைத்துள்ளது. இவை இவ்வாணைக்குழுவின் மீதான நம்பிக்கையை முற்று முழுதாக இழக்கச்செய்ய வழிகோலியது.

984276_1595761873992359_5040852698020180132_n 984276_1595763260658887_4147331105078613462_n 10393701_1595763030658910_7004055028643228343_n 10639629_1595762780658935_8115167146047014981_n 10995480_1595762383992308_4160199896036713608_n

2.   இவ்வாணைக்குழுவின் விசாரணைப் பரப்பு ஜூலை 2014 இல் விஸ்தரிக்கப்பட்டு யுத்தத்தின் போது நிகழ்ந்த ஏனைய  குற்றங்கள் தொடர்பாகவும் விசாரிக்குமாறு  ஆணைக்குழு அப்போதைய அரசாங்கத்தால் பணிக்கப்பட்டது. இஃது இவ்வாணைக்குழுவின் பணியையும் நோக்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அனைத்துக் குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடும். ஆனால் இது ஒரு ஒழுங்கு முறையாகச் செய்யப்பட வேண்டும். காலத்திற்குக் காலம் தேவைக்கேற்றவாறு ஆணைக்குழுவின் விசாரணைப் பரப்பு கூட்டி குறைக்கப்படுவது அது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஓர் ஆணைக்குழு என்பதற்கான சான்றாகும்.

3.   ஜனவரி 9 2015 பதவியேற்ற புதிய அரசாங்கம் காத்திரமான உள்ளக விசாரணையொன்றை உருவாக்கப் போவதாகக் கூறி ஐ. நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கை வெளிவருவதையும் பிற்போடச் சொல்லிக் கோரி வெற்றியும் கண்டுள்ளது. ஆனால் நடைமுறையில் முந்தய அரசாங்கத்தின் கொள்கைகளையே இந்த அரசாங்கமும் தொடர்கின்றது என்பதற்கு ,வ்வாணைக்குழுவின் தொடர்ச்சியான நிலவுகை உதாரணமாகின்றது. இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட  கரிசனைகள் தொடர்பில் எந்த மாற்று நடவடிக்கையும் ,ந்த அரசாங்கம் எடுக்காமல் அதன் அமர்வுகளை நடத்த அனுமதித்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

 

 

 

 

SHARE