
‘அசுரன்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் தலைப்பு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று தகவல் வெளியானது.
