
பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள்
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினர்.
