
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையை தயார் செய்திருப்பதாகவும், ஆர்யாவுக்கு அந்தக் கதையைக் கூறி அவரது சம்மதத்தையும் பெற்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
