இதற்குதான் இங்கு வந்தாயா?’ திட்டும் தந்தை

125

பிரபல இந்திய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து கலந்துகொண்டிருப்பவர் செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பொஸ் வீட்டிற்கு சென்றதும் அவருக்கென மிகப்பெரிய ஆர்மி உருவாகியது. அத்தோடு அவருக்கென இரசிகர்கள் பலமும் அதிகரித்தது.

எனினும் இந்த நிலை நீடிக்கவில்லை. சில நாட்களிலேயே அவர் மீதிருந்த நல்ல பெயர் குறையத்தொடங்கியது.

இதற்கு முக்கிய காரணம் அவர் கவினுடன் காதலில் விழுந்தமையும் அவரது சில செயற்பாடுகளுமேயாகும்.

தற்போது பிக்பொஸ் நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க் இடம்பெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் முகேனின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் பிக்பொஸ் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரமோவில் லொஸ்லியாவை பார்க்க அவருடைய தந்தை வீட்டிற்குள் செல்கிறார். இந்த ப்ரமோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அந்த ப்ரமோ காட்சியில் தந்தையைக் கண்ட லொஸ்லியா அவரை பார்த்து விம்மி விம்மி அழுகிறார். எனினும் அதனைக் கண்டுகொள்ளாத லொஸ்லியாவின் தந்தை, ‘எல்லோரும் காறி துப்புவது போல் நடந்துக்கொண்டாய், இதற்குதான் இங்கு வந்தாயா?’ என கடுமையாக திட்டுகிறார்.

அவரின் சீற்றத்தைக் கண்ட கவின் பீதியில் உறைந்துள்ளார். அத்தோடு ஏனைய போட்டியாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE