தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் என்றால் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரது படத்தில் எப்போதுமே அண்ணனுக்கு உறுதுணையாக இருக்கும் தங்கை என்ற கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்து இருப்பார்.
அதேபோல் அவருடைய வாழ்க்கையில் உத்ரா மேனன் என்ற தங்கை உள்ளார். மேலும், இப்படி ஒரு அண்ணனா என்று ஆச்சரிய படும் வைகையில் சில சுவாரசியமான தகவல்கள் கொடுக்கிறார் தங்கை உத்ராமேனன்.
வீட்டில் நாங்க பாசமலர் எல்லாம் இல்லை அவர் என்ன சொன்னாலும் நாங்க கேக்கமாட்டோம் நாங்க என்ன சொன்னாலும் அவர் கண்டுக்கமாட்டார்.
இருந்தாலும் நாங்க வளர்ந்த பின்பு தான் அண்ணன் சொன்ன விஷயங்கள் எல்லாம் சரி என்று புரிய ஆரம்பித்தது மற்றபடி எல்லா அண்ணன் தங்கையை போல் சண்டை காட்சிகள் உண்டு.
அவர் எங்களுக்கு அண்ணனாக இருப்பதை விட என் பொண்ணுக்கு தாய்மாமாவாக பெஸ்ட் என்கின்றார் உத்ரா மேனன்