
பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்த பிரியாமணி திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கினார். தற்போது இணைய தொடர் மூலம் மீண்டும் வருகிறார்.
இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் – பிரியா மணி – சந்தீப் கிஷன் கூட்டணியில் ‘தி பேமிலி மேன்’ எனும் திரில்லர் தொடர் அமேசானில் செப்டம்பர் 20ந்தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியில் ‘ஸ்ட்ரீ’, ‘கோ கோவா கான்’, ‘ஷார் இன் த சிட்டி’ ஆகிய படங்கள் மூலம் பாராட்டப்பட்ட இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இருவரும் இயக்குகிறார்கள்.
