நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.’ இந்த படம் `100 சதவீதம் காதல்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது. சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்’ விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
