நடிகைகளில் ரொம்ப வித்தியாசமானவர் நயன்தாரா

117
விக்னேஷ் சிவனின் மேனேஜரை தயாரிப்பாளராக்கிய நயன்தாரா

நயன்தாரா, மயில்வாகனன், விக்னேஷ் சிவன்
நடிகைகளில் ரொம்ப வித்தியாசமானவர் நயன்தாரா. விளம்பரங்களில் அதிகம் தோன்றுவதில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வேலை செய்த அத்தனை பேருக்கும் உதவி செய்வது. தனது முன்னாள் மேனேஜருக்கு கார் பரிசளித்தது என ஏதாவது ஒருவகையில் நல்லது செய்துகொண்டே இருப்பார். அந்த வகையில் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேனேஜரான மயில்வாகனனை இணைத் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார்.
மயில்வாகனன்
நயன்தாராவின் ரவுடிபிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரிக்க, நெற்றிக்கண் படத்தை கே.எஸ்.மயில்வாகனன் இணைந்து தயாரிக்கச் செய்து அழகு பார்த்திருக்கிறார் நயன்தாரா. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.
SHARE