விஜய் சேதுபதிக்கு பதில் விஜய் ஆண்டனி

105
மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபின் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மம்முட்டி, நயன்தாரா, விஜய் ஆண்டனிஇதன்மூலம் விஜய் ஆண்டனி மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
SHARE