
பிரபல மலையாள நடிகர் சத்தார் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் சத்தாருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கடுங்கல்லூரில் பிறந்த சத்தார் 1976–ல் கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘பரயேயி அவஷ்யமுன்டு’ என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் வின்சென்ட் இயக்கிய ‘அனவரனம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். 1970 மற்றும் 80–களில் ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கில் 300 படங்களில் சத்தார் நடித்து இருக்கிறார். அவரது உடலுக்கு நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள். கேரளாவில் இறுதி சடங்கு நடந்தது.