
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அவர் நடித்து முடித்துள்ள பாரிஸ் பாரிஸ் திரைப்படம் திரைக்கு வர தயாராகியிருக்கிறது.
அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருகிறார். தற்போது தாஜ்மகாலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
