வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களது பிள்ளைகளை, கணவன்மாரை, சகோதர, சகோதரிகளை, தந்தையை மீட்டுத் தாருங்கள் எனக் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலகத்துக்குச் சென்று ஜனாதிபதிக்கான மனுவை அரச அதிபரூடாக வழங்கிவைத்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் குறித்த மனு கையளிக்கப்பட்டது.