பிரபல நடிகையை கரம்பிடிக்கப் போகும் ஹர்பஜன் சிங்…

437
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான கீதா பசராவை மணம் புரிய உள்ளார்.ஹர்பஜன்சிங், கீதாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவது உண்டு. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர்.

இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடும் போது கீதாவும் உடன் வருவார்.

இந்நிலையில் இருவரும் இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், இவர்களது திருமணத்தை குடும்பத்தினர் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கீதா பசாரா சில ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE