காடையர்களால் கற்பழிக்கப்பட்ட 16 வயது மாணவி: வன்னியில் பயங்கரம்

366

 

கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது.

க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட எம்.பிக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அத்துடன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனர்

11026011_428673990634060_4078761305743794967_n 11026053_428673860634073_2016604630071085287_n

SHARE