தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் கட்சியின் தலைவர் என்றால் ஏன் நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றீர்கள்?
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கருத்துக்களை சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்து எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யும் யோசனைக்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற கலைப்பு மே மாதத்துக்கு பிற்போடப்படும்- ஜனாதிபதி
தேர்தல் முறையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்காக நாடாளுமன்ற கலைப்பு எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏப்ரல் 23ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதன்படி ஜூன் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுவினரை ஜனாதிபதி சந்தித்தார்.
இதன்போது தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகம் செய்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.