எதிர்வரும் மே மாதம் வரையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

403

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இந்தப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர், தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையுடன், தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.

தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ததன் பின்னர் தேர்தலை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

Parliament-Sri-Lanka-interior1

SHARE